News December 26, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
எஸ்பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

இன்று (ஜன.13) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆலோசிக்கப்பட்டது.
News January 13, 2026
சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழா – 2026

இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், சாதி, மதம், மொழி மற்றும் பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் திருவிழாவாக ‘சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் அல்லது சமுதாயக் கூடம் / பொதுத் திடலில் வரும் ஜன.14ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா

இராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா இன்று (ஜன.13) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த பொங்கல் திருவிழாவில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்.


