News December 26, 2025

புதுவை ரெயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

image

புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரெயிலில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். எஸ் 1 பெட்டியில் பிளாஸ்டிக் சணல்’ பை ஒன்று கிடந்தது. அதை திறந்து பார்த்த போது 4 மூட்டைகளில் 8 கிலோ கஞ்சா இருந்தது. இதுகுறித்து ஓதியஞ்சாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கஞ்சாவை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

புதுவை: கார் மோதி முதியவர் படுகாயம்

image

திரு.பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் (73). இவர் நாகப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று பெரியப்பள்ளி பஸ் நிறுத்தத்திற்கு நடத்து வந்து திரு.பட்டினம் காந்தி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திரு.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 29, 2025

புதுச்சேரியில் இன்று போக்குவரத்தில் மாற்றம்

image

புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அவரின் வருகையை முன்னிட்டு, இன்று போக்குவரத்து மாற்றங்கள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவர் செல்லும்போது சாலையில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.” என தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

புதுவையில் 4 பேரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி

image

முத்தியால்பேட்யைச் சேர்ந்த ஒருவரின், மொபைல் போனிற்கு மர்ம நபர் ஒருவர் ஆர்.டி.ஓ இ-செல்லான் லிங்கை அனுப்பி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.66,089-ஐ மோசடி செய்துள்ளனர். இதேபோல் ஏரிப் பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.59,000; ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.1000; மூலக்குளம் பெண் ஒருவரிடம் ரூ.34,952 மோசடியில் இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!