News December 25, 2025

மதுரை மாவட்ட ஆட்சியர் பெயரில் முகநூலில் போலி கணக்கு!

image

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Similar News

News January 20, 2026

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

மதுரை: சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு

image

கல்லுப்பட்டி அருகே குன்னத்துரை சேர்ந்தவர் இருளாண்டி மகள் முத்துலட்சுமி (16). இவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்த குன்னத்தூர் விஏஓ பாலமுருகன்(36) அங்கு சென்று ஆய்வு செய்தார். தூக்கில் தொங்கிய சிறுமியின் முகத்தில் காயங்கள் இருக்கவே அது குறித்து அவர் கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். கல்லுப்பட்டி போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

News January 20, 2026

மதுரை: 10 th முடித்தால் மத்திய அரசு வழங்கும் ரூ.15,000 APPLY..

image

மதுரையில் 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் BE., முடித்தவர்களுக்கான தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நாளை (ஜன.21) காலை 9 மணிக்கு மூன்று மாவடியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு: 9499055748 க்கு அழைக்கலாம்.

error: Content is protected !!