News December 25, 2025
திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 30, 2025
மேலூர்: வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு குறித்த அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நாளை (டிச.30) திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை பூங்கா திறந்திருக்கும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
திருச்சி: பிரச்சனைகளை தீர்க்கும் நல்லாண்டவர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பிரசித்தி பெற்ற நல்லாண்டவர் கோவில் அமைந்துள்ளது. குடும்பத்தில் ஏற்படும் தகராறு, விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொந்தரவு, மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இங்குள்ள நல்லாண்டவரிடம் முறையிட்டால், அவர் அண்ணனாக இருந்து பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை மறக்கமால் SHARE செய்க.
News December 29, 2025
திருச்சி: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!.


