News December 25, 2025
புதுச்சேரி: இந்த கோயில் சென்றால் வெற்றி நிச்சயம்!

புதுச்சேரியில் மிகவும் பிரபலமான கோயில்களில் மணக்குள விநாயகர் கோயிலும் ஒன்று, இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல நன்மைகளை பெறலாம். இங்குள்ள விநாயகரின் அருள் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 31, 2025
புதுச்சேரி: அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித்தலைவர்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தந்தை அசோகன், நேற்று இரவு (30.12.2025) உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார். இன்று (31.12.2025) அரியலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது இல்லத்தில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சிவா தலைமையில், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News December 31, 2025
புதுச்சேரி: சட்டமன்ற உறுப்பினர் புத்தாண்டு வாழ்த்து

வரும் ஆண்டு அனைவரது வாழ்க்கையிலும், வசந்த காற்றை வீச செய்யட்டும் என புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் புத்தாண்டுவாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் 2025ல் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பல்வேறு வெற்றிகளை கண்டதாகவும், அதே உத்வேகத்தோடு அடுத்த ஆண்டில் அடி எடுத்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2026ல் ஒவ்வொரு குடிமகனின் இல்லங்களிலும் வசந்தம் வீசட்டும் என்று கூறியுள்ளார்.
News December 31, 2025
புதுவை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அட்டை: <
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in
4.பாஸ்போர்ட்: Passport Seva ஆகிய இணையதளங்களில் விண்ணப்பியுங்க.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


