News December 25, 2025
9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்

திருமணம் என்பது இவருக்கு வேடிக்கையான விளையாட்டாக இருந்துள்ளது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த வாணி, தனது அத்தையின் உதவியுடன், அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, பின்னர் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதுவரை 8 பேரை திருமணம் செய்த வாணி, சமீபத்தில், 9-வது திருமணம் செய்தார். வாணியை திருமணம் செய்தவர், சந்தேகத்தின்பேரில் போலீசில் புகாரளிக்க, வாணியும் அவரது அத்தையும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
Similar News
News December 31, 2025
41 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்: CTR நிர்மல் குமார்

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் 3 நாள்களாக TVK நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வந்த விசாரணை இன்று நிறைவு பெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல் குமார், சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது. கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்தோம். 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனத் தெரிவித்தார்.
News December 31, 2025
2025: இதுதான் பெஸ்ட் டெஸ்ட் அணியா?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 2025-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. அந்த அணி வருமாறு: கே.எல்.ராகுல்(IND), பென் டக்கெட்(ENG), டெம்பா பவுமா(SA- கேப்டன்), ஜோ ரூட்(ENG), சுப்மன் கில்(IND), ரவீந்திர ஜடேஜா(IND), அலெக்ஸ் கேரி (AUS- விக்கெட் கீப்பர்), சைமன் ஹார்மர்(SA), மிட்செல் ஸ்டார்க்(AUS), முகமது சிராஜ்(IND), ஜஸ்பிரித் பும்ரா(IND). நீங்க ஒரு பெஸ்ட் லெவனை கமெண்ட் பண்ணுங்க.
News December 31, 2025
விஜய் மகனுடன் டேட்டிங்.. பிரபல நடிகை ஓபன் டாக்

சின்னத்திரை பிரபலம் ரவீனா தாஹா, விஜய் மகன் ஜேசன் சஞ்சயுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவலில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி தான் என்று ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன், தனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், அவருடன் நடிக்க வேண்டும் என ஆசை, அது இனி முடியாததால் ஜேசனுடன் நடிக்க வேண்டும் என்று தான் கூறியதை திரித்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆசை கைகூடுமா?


