News December 25, 2025
BREAKING: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

தேர்தல் அறிக்கை தயார் செய்ய அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணி, ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல தரப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்கும் வகையில், இக்குழுவினரின் சுற்றுப்பயண திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் EPS அறிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
திருமாவை சமாளிக்க திமுக தலைமை முயற்சியா?

2026 தேர்தலையொட்டி, கூட்டணியை மேலும் வலுப்படுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம். இதற்காக ராமதாஸ் தரப்பு பாமகவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், 7 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என திருமா கூறியிருந்தார். எனினும், போட்டி கடுமையாக இருப்பதால் திருமா பொறுமை காக்குமாறு அறிவுறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது
News January 3, 2026
பொங்கல் பரிசு பணம்… வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணத்தையும் எதிர்பார்த்து ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை & 1 கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை மட்டுமே தமிழக அரசு அறிவித்தது. இதனால் ரொக்கப் பணம் கிடையாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, ₹3,000 ரொக்கப் பணம் அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்றும் தனி அரசாணை பிறப்பிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
News January 3, 2026
20 வருடங்களுக்கு முன்பு PHOTOS

நவீன தொழில்நுட்பங்களால் இந்த உலகம் வேகமாக மாறி வருகிறது. என்ன வரும்? எப்போது வரும்? என்று எதுவும் தெரிவதில்லை. ஆனால், எதிர்பாராத வகையில், அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன்படி, 20 வருடங்களுக்கு முன்பு இருந்தவை, தற்போது எப்படி இருக்கிறது என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.


