News December 25, 2025
தென்காசி: VAO லஞ்சம் கேட்டா இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462 – 2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
Similar News
News December 31, 2025
தென்காசி: கடைகளை உடைத்து பல லட்சம் கொள்ளை!

பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் இயங்கி வரும் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 2மளிகை கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை என அடுத்தடுத்து மூன்று கடைகளின் கதவுகளின் பூட்டுகளை இரவில் மர்ம நபர்கள் உடைத்து பல லட்சம் ரொக்க பணம் மற்றும் 1.50 லட்சம் மதிப்பிளான சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
தென்காசி: கூட்டுறவு வங்கியில் வேலை! உடனே APPLY

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 31, 2025
தென்காசி: அரசு பேருந்து – லாரி மோதி விபத்து!

தென்காசியில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற கேரள மாநில அரசுப்பேருந்து புளியரை அருகே முன்னே சென்ற சரக்கு லாரியை முந்தி செல்ல முயன்ற நிலையில் எதிரே திடீரென ஒரு வாகனம் வந்ததின் காரணமாக அரசு பேருந்து முன்னே சென்ற லாரி பின்பகுதியில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. விபத்து குறித்து போலீஸார் விசாரனை.


