News December 25, 2025
குமரி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்கள், பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில்(04652 – 227339) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
Similar News
News January 15, 2026
குமரியில் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

குமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே தேரிவிளையை சேர்ந்தவர் பொன்தங்கம் (42). இவர் இழுப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தார். மேலும், திருமணம் ஆகாமல் இருந்து வந்த அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் நேற்று (ஜன.14) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 15, 2026
குமரியில் காலை முதலே படகு சேவைகள் தொடக்கம்

பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலையில் நேற்று (ஜன.14) மகர விளக்கு தெரிந்ததை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் உட்பட ஏராளமானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இதனால் கன்னியாகுமரியில் இன்று காலை 6 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும், மாலை 5 மணி வரையிலும் தொடர்ந்து பட போக்குவரத்து நடைபெறும். இன்று முதல் மூன்று நாட்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 15, 2026
குமரி: இன்சூரன்ஸ் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை

ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் தோமஸ் (58). தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நேற்று (ஜன.14) போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


