News December 25, 2025

கிறிஸ்துமஸ் நாளில் சோகம்.. பஸ் விபத்துகளில் 14 பேர் பலி

image

<<18664721>>திட்டக்குடி அருகே<<>> நேற்று அரசு பஸ் கார்கள் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். அதேபோல், தி.மலை அடுத்த ராஜந்தாங்கலில் இன்று காலை அரசு பஸ் கார் மீது மோதியதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு அருகே 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கிய 2 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாளில் அரசு பஸ்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

Similar News

News February 9, 2026

BREAKING: நள்ளிரவில் தவெக முக்கிய நிர்வாகிகள் கைது

image

தேனியில் கடந்த 7-ம் தேதி நாதக-தவெகவினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தவெக மாவட்ட நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News February 9, 2026

குறை சொன்னால் மூளை பாதிக்கும்

image

அதிகமாக குறை சொல்வது, மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று stanford பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எப்போதும் விமர்சனம் செய்வது குற்ற உணர்வு, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றும், கவலை, பயம், தன்னம்பிக்கை குறைவு உருவாக காரணமாகிறது எனவும், சொல்லும் வார்த்தைகள் மற்றவரின் மனதை மட்டுமல்ல அவர்களின் மூளையையோ பாதிக்கும் எனவும் தெரியவந்துள்ளது. எனவே, மற்றவர்களிடம் பேசும்போது, கவனமாக பேசுங்க.

News February 9, 2026

எனக்கு இப்போது 20 வயது தான்: செங்கோட்டையன்

image

தவெகவில் இணைந்தபிறகு தனக்கு வயது 20 ஆக குறைந்துவிட்டது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏனென்றால், அக்கட்சியில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளதால் அவ்வாறே தானும் உணர்வதாக அவர் விளக்கமளித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், விஜய்யை தமிழக முதல்வராக மாற்றும் வரை ஓயப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!