News December 25, 2025

தூத்துக்குடி: வீடுகட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி

image

பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு அரசாங்கம் ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதில் முழுத் தொகையும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நிரந்தர வீடு இல்லாதவர்கள், வீடற்றவராகவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள் Aawas Survey App ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News December 29, 2025

தூத்துக்குடி: பணம் விவகாரத்தில் தாய், மகன் கடத்தல்!

image

ஸ்ரீவை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, தேனியை சேர்ந்த மல்லிகாவிடம் (58) ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். மல்லிகா கடந்த 2 மாதமாக வட்டி கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜபாண்டி 5 பேருடன் மல்லிகா வீட்டில் அத்துமீறி நுழைந்து, மல்லிகா, அவரது மகன் துர்கேஷை தாக்கி 15 பவுன் நகை, ரூ.50,000 எடுத்துள்ளனர். பின் காரில் கடத்தி திருமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

News December 29, 2025

தூத்துக்குடி: இது தெரியாம இனி GAS சிலிண்டர் வாங்காதீங்க!

image

தூத்துக்குடி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News December 29, 2025

தூத்துக்குடி: பஸ் மோதி சம்பவ இடத்தில் பரிதாப பலி!

image

ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (36) நேற்று கங்கைகொண்டான் சிப்காட் அருகே ஆலடிப்பட்டியில் இருந்து டூவீலரில் சென்றனர். அப்போது குமரியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற உலகநாதன் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை.

error: Content is protected !!