News May 1, 2024
கிருஷ்ணகிரி: ஆயுதங்களுடன் 5 பேர் கைது

தளி போலீசார் பீலாளம் சாலை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று (ஏப்ரல் 30) ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததும், வீடு புகுந்த கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான இணைய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இணையதளங்களில் உள்நுழையும் போது ‘Keep me logged in’ அல்லது ‘Remember me’ போன்ற வசதிகளை குறிப்பாக பொது கணினிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்தால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
News March 10, 2026
கிருஷ்ணகிரி போலீஸ் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு எதிராக மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் தீவிர விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. “மது உடல்நலத்திற்கு கேடு, புகை உயிரைக் கொல்லும்” என எச்சரித்துள்ள போலீசார், ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


