News December 25, 2025

ராணிப்பேட்டை: பன்றி கடித்து ஐந்து வயது சிறுமி படுகாயம்

image

தாஜ்புரா ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், இவரது மகள் சிவானி 5 இவர் தனது வீட்டின் அருகே இன்று (டிசம்பர் 25)ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது பன்றி கூட்டம் ஒன்று திடீரென அந்த வழியாக வந்தது. அதிலிருந்து ஒரு பன்றி சிவானியை முகம் உடல் என பல இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Similar News

News December 28, 2025

ராணிப்பேட்டை: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க

image

மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 28, 2025

ராணிப்பேட்டையில் 35 பேர் ஆப்சென்ட்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர்களுக்காக, நேற்று தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க 390 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் நேற்று மொத்தம் 355 பேர் தேர்வு எழுதினர். 35 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 28, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (டிச.27) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!

error: Content is protected !!