News December 25, 2025
கோவை மாணவியுடன் கலந்துரையாடிய PM

‘சன்சாத் கேல் மஹோத்சவ்’ போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்ற PM மோடி, இளம் வீரர்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக, கோவை மாணவி நேசிகாவிடம் அவர் விளையாடும் கபடி, சைக்கிள் போட்டிகளில் அதிகம் பிடித்தது எது என்று கேட்க, மாணவி துடிப்புடன் ‘கபடி’ என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய PM, வீரர்களின் உற்சாகம், தன்னம்பிக்கை இந்தியாவின் வலிமையை பறைசாற்றுவதாக குறிப்பிட்டார்.
Similar News
News December 28, 2025
நண்பனுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தோனி (PHOTO)

நடிகர் சல்மான் கானின் 60-வது பிறந்த நாள் மும்பையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கொண்டாடப்பட்டது. அதில் திரைபிரபலங்கள் சஞ்சய் தத், ஜெனிலியா, ரகுல் ப்ரீத் சிங், ஹூமா குரேஷி உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக பார்டியில் எண்ட்ரீ கொடுத்த தோனி, தனது நண்பர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
News December 28, 2025
ஜனநாயகன் AL டிவியில் எப்போது ஒளிப்பரப்பாகும்?

ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் டிவியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படம் வரும் ஜன.9-ம் தேதி ரிலீஸாக உள்ளது. எனவே அதற்கு முன்பாக வரும் ஜன. 3,4 தேதிகளில் ஒளிபரப்ப, டிவி உரிமத்தை வாங்கிய ஜீ தமிழ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் படத்தின் டிரெய்லர் அப்டேட்டும் புத்தாண்டையொட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.
News December 28, 2025
செங்கோட்டையனுடன் அதிமுக மூத்த தலைவர் இணைந்தார்

சேலம் மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக வலம் வந்த பல்பாக்கி சி.கிருஷ்ணன் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இவர், ஓமலூர் தொகுதியில் 1989, 1991, 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் வென்று MLA ஆனவர். EPS-க்கு நெருக்கமாக இருந்த கிருஷ்ணன், திடீரென தவகெவில் இணைந்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, சற்றுமுன் <<18692313>>கிருஷ்ணனை அதிமுகவில் இருந்து<<>> EPS நீக்கினார்.


