News December 25, 2025

திட்டக்குடி: விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு

image

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று இரவு விபத்து நடந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 28, 2025

கடலூர்: டூவீலர் – கார் மோதி பயங்கர விபத்து

image

வேப்பூர் அருகே உள்ள மா.புத்தூரை சேர்ந்தவர் கவிதா (36). இவர் மகேஸ்வரி (37) என்பவருடன் டூவீலரில் மங்களூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்களும் படுகாயமடைந்து, வேப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 28, 2025

கடலூர்: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

கடலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் மீது வழக்கு

image

சிதம்பரம் அருகே சிலம்பிமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (35). திருமணமான இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் வழக்கு பதிந்து, செந்தமிழ் செல்வனை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!