News December 25, 2025
கடலூர்: 12th போதும் அரசு வேலை; EXAM இல்லை!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு + MLT
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க
Similar News
News December 28, 2025
கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

பாச்சார பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரசாயி (48). இவர் நேற்று சண்முகம் என்பருடன் டூவீலரில் கன்னி தமிழ்நாடு பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியதில் அரசாயி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சண்முகம் காயங்களுடன் உயர் தப்பினார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வடலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
News December 28, 2025
கடலூர்: பஸ் – கார் மோதி விபத்து!

புதுச்சேரியில் இருந்து நேற்று கடலூர் நோக்கி வந்த கார் சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கார், எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரின் டிரைவர் மரிய சகாயம் மற்றும் 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 28, 2025
கடலூர்: ரோந்து அதிகாரிகள் எண் அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27.12.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


