News December 25, 2025
சிவகங்கையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
Similar News
News December 27, 2025
சிவகங்கை: ரேஷன் கார்ட் இருக்கா.. கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க
News December 27, 2025
சிவகங்கை: துப்புரவு பணியாளர் கீழே விழுந்து உயிரிழப்பு

சிவகங்கை நகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த அபிமன்னன் (45), அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சென்ற போது இட்லி துணியை காய வைக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 27, 2025
சிவகங்கை: 13 வயது சிறுவன் மீது மோதிய டூவீலர்

காளையார் கோவில் அருகே உள்ள செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவரின் 13 வயது மகன், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காளீஸ்வரி காளையார் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


