News December 25, 2025

செயற்கை கால் பொருத்தும் முகாம் – துவக்கி வைத்த MP!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரிமாசங்கம் நடத்தும் செயற்கை கால் பொருத்தும் முகாம் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று டிச 25, இந்த முகாமினை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் கால்கள் இழந்த ஏராளமானோர் செயற்கைகால் பொருத்தி சென்றனர்.

Similar News

News January 14, 2026

கள்ளக்குறிச்சி: 12th PASS – ரூ.45,000 சம்பளத்துடன் வேலை!

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12-ம் வகுப்பும் மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 14, 2026

கள்ளக்குறிச்சியில் மாந்திரீக பூஜை? மர்ம நபர்கள் அட்டூழியம்!

image

கள்ளக்குறிச்சி: மேலப்பழங்கூரில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள கருப்பண்ண சாமி சிலையை நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அங்கு உடைந்த தேங்காய் மற்றும் பூக்களை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, யாரேனும் மாந்திரீகத்தில் ஈடுபட்டு, சிலைகளை சேதப்படுத்தினர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

ஆட்சியருக்கு மண்பானை வழங்கிய விசிக பெண் நிர்வாகி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்தை, நேற்று விசிக மாநில மகளிர் அணி செயலாளர் வேல்.பழனியம்மாள் சந்தித்தார். அப்போது, ஆட்சியரிடம் விசிக-வின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமான பானை மற்றும் பனை வெல்லம் கொடுத்து பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில் விசிக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!