News December 25, 2025
இராம்நாடு: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

இராம்நாடு, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <
Similar News
News December 27, 2025
இராமநாதபுரம்: ரேஷன் கார்ட் இருக்கா…டிச.31 கடைசி

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க
News December 27, 2025
இராமநாதபுரம் GH-ல் அம்மா உணவகம் மீண்டும் திறப்பு

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று (டிச.26) அம்மா உணவகம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
News December 27, 2025
இராம்நாடு: இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து சாந்த் பிவி காம்ப்ளக்ஸ் 154 பகுதியில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகின்ற ஜன.5 தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.13 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சி நேரம் 9:30AM முதல் 5:00PM வரை. மேலும் தகவலுக்கு 8825954443, 8056171986 *ஷேர் பண்ணுங்க


