News May 1, 2024
நடராஜன் இடம்பெறாதது வருத்தம்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழர்கள் பெயர்கள் இடம் பெறாதது ஏமாற்றமளிப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் டெத் ஓவர்களில் யாக்கர்களால் எதிரணியை நிலைகுலையச் செய்வதை தனிப்பட்ட முறையில் தான் விரும்புவதாக கூறிய அவர், இந்திய அணியில் அவர் இடம் பெறாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். வாய்ப்பு இருப்பின் அவரைத் தேர்வு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தினார்.
Similar News
News March 16, 2026
மாதம் ₹85,000.. கணவரை வாடகைக்கு விட்ட மனைவி!

10 ஆண்டு திருமணம், மகன்(8) இருக்கும் நிலையில், தாய்லாந்து பெண் ஒருவர், தன் கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை கண்டறிந்துள்ளார். தங்களால் பிரிந்து வாழ முடியாது என காதல் ஜோடி மறுத்த போது, மனைவிக்கு நூதன யோசனை உதித்துள்ளது. கணவன் அந்த உறவில் தொடர மாதம் ₹85,000 Demand செய்துள்ளார். இந்த ஆஃபரை இருவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது செய்தி வெளியாக, பலரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.
News March 16, 2026
புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்யும் விஜய்

தவெக சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, விஜய் இன்று இறுதி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று முதல் 23-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அங்கு போட்டியிட ஆர்வமாக இருக்கும் வேட்பாளர்களிடம், விஜய் இன்னும் சற்றுநேரத்தில் நேர்காணல் நடத்துகிறார்.
News March 16, 2026
FLASH: வெள்ளி விலை ₹24,000 குறைந்தது

<<19395246>>தங்கத்தை <<>>தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ₹4 குறைந்து ₹276-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் 11-ல் கிலோ வெள்ளி ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், கடந்த 5 நாள்களில் மட்டும் மொத்தம் ₹24,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் வெள்ளி விலை மேலும் குறையும் என கூறப்படுவதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


