News December 25, 2025
மயிலாடுதுறையில் 452 பேருக்கு பணி நியமனம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளை சேர்ந்த 1,524 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதில், 20 நிறுவனங்கள் மூலம் 452 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 29, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் திருவெண்காடு அரசு சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி, கல்லூரி மாணவிகள் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 50 மாணவிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உரிய சான்றுகளுடன் வருகிற 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று(திங்கட்கிழமை) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந்தேதி வரை கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளதால் கால் நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி போட்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.