News December 25, 2025

சேலத்தில் ஓராண்டில் 127 பேர் மீது குண்டர் சட்டம்!

image

சேலம் மாநகரில் குற்றங்களைக் குறைக்க கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்படி, கடந்த ஜனவரி முதல் தற்போது வரை இதுவரை 127 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள், திருடர்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அடங்குவர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கை தொடரும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 29, 2025

சேலம் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு!

image

சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு துணைத் தலைவர் சிங்காரவேலனை, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இன்று சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.மேலும் பாஜக நிர்வாகியை தாக்கப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

News December 29, 2025

சேலம்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <>இங்கே<<>> கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்

2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்

3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்

4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News December 29, 2025

சேலம்: அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி!

image

சேலம்: ஓமலூர் தொகுதியில் மூன்று முறை (1989, 1991, 2011) எம்.எல்.ஏ-வாக இருந்த பல்பாக்கி சி.கிருஷ்ணன், தவெக நிர்வாகி செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.இதனைத் தொடர்ந்து, கட்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, பல்பாக்கி கிருஷ்ணனை அதிமுகவிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!