News December 25, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <
Similar News
News January 15, 2026
திருவாரூர்: தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், காக்காகோட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரை விமானம் ஒன்று தாழ்வாக பறந்தது. இவ்விமானம் பல்வேறு கிரங்களில் மிகவும் தாழ்வாக பலத்த சத்தத்துடன் தென்னை மரங்களை தொட்டும் செல்லும் அளவிற்கு பறந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது. பின்னர், அது பயிற்சி விமானம் என தெரிய வந்தது.
News January 15, 2026
திருவாரூர்: அம்மன் நகையை திருடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

கோட்டச்சேரியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட 2.3/4 சவரன் நகையை 6 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மர்ம நபர்கள் கரூரில் பதுங்கிருப்பதாக தகவல் கிடைத்தன்பேரில், அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த வேதவன்(40), பாலசுப்ரமணியன்(19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News January 15, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


