News December 25, 2025
இராமநாதபுரத்தை உலுக்கிய சம்பவம்; குற்றவாளிக்கு குண்டாஸ்

இராமேஸ்வரம், சேரங்கோட்டை 12ம் வகுப்பு மாணவி ஷாலினியை அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் காதலை ஏற்க மறுத்ததால் கடந்த (நவ.19)அன்று பள்ளிக்கு சென்ற மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி சந்தீஷ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News February 17, 2026
இராமநாதபுரம்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <
News February 17, 2026
ராமநாதபுரம்: மின்சாரம் தாக்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே காத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி தனக்கு சொந்தமான வயல்வெளிகளில் மிளகாய், பருத்தி பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் அட்டூழியம் செய்வதாக கூறி தோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட மின்வேலியை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 17, 2026
இராமநாதபுரம்: கனமழைக்கு எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ஆம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. *ஷேர் பண்ணுங்க


