News May 1, 2024
மாணவர்களை விழுங்கும் நீட் தேர்வு

நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மரணங்கள் குறித்து நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அடுத்தடுத்து மாணவ மரணங்கள் ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும் அங்கு 25க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நீட் மரணங்களுக்கு அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
Similar News
News March 19, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 18.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 19, 2026
தொகுதிப் பங்கீடு.. அமித்ஷாவை சந்திக்கும் EPS?

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், நாளை <<19417440>>பியூஷ் கோயல்<<>>, EPS-ஐ சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்வார் என கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக & இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்வதற்காக அமித்ஷாவை, EPS நாளை டெல்லியில் சந்திக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News March 19, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற கடைசி சுயேச்சை!

2017-ல் RK நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட TTV தினகரன், அதிமுகவின் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கு முன்னர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தளி தொகுதியில் போட்டியிட்ட T ராமச்சந்திரன், CPI வேட்பாளர் நாகராஜ ரெட்டியை 4,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றிக்கு பிறகு CPI-ல் இணைந்த அவர், அதே தொகுதியில் 2011, 2021 தேர்தல்களிலும் வென்று MLA ஆனார்.


