News December 25, 2025
புதுவை: 3 பேரிடம் ஆன்லைன் மோசடி

புதுவை, வில்லியனூரைச் சேர்ந்தவரின் போன் எண்ணுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ரூ.20 ஆயிரமும்; இதேபோல் வேறு நபரிடம் ரூ.19,479-ம்; சேதராப்பட்டு சேர்ந்தவரின் செல்போன் எண்ணுக்கு வங்கியின் பெயரில் குறுஞ்செய்தியாக லிங்க் அனுப்பி அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.12,400-ம் திருடப்பட்டது. இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
புதுச்சேரி: ரூ.69,100 சம்பளத்தில் வேலை

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 25487
3. வயது: 18-23 (SC/ST-28,OBC-26)
4. மாதச்சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு
6.கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 27, 2025
புதுவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
புதுவை: கையில் வெட்டு-கூலித்தொழிலாளி படுகாயம்

லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ராஜசேகரன் (52). இவர் சம்பவத்தன்று பிச்சை வீரன்பேட்டில் ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பலகையை எந்திரம் மூலம் வெட்டியபோது, எதிர்பாராத விதமாக அவரது வலது கையில் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


