News December 25, 2025
கிறிஸ்துமஸ் வழிபாட்டில் PM மோடி

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, டெல்லி ரிடெம்ப்ஷன் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் PM மோடி பங்கேற்றார். இதுபற்றிய அவரது X பதிவில், கிறிஸ்துமஸ் வழிபாட்டில் கலந்து கொண்டது அன்பு, அமைதி, கருணை எனும் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த திருநாளின் உணர்வுகள், சமூகத்தில் நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
பொண்ணு எங்க வந்துச்சி.. புண்ணுதான் வந்துச்சி

சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர், ஃபேஸ்புக்கில் உல்லாசத்திற்காக பெண் வேண்டும் என கேட்டு மர்ம நபருக்கு ₹28,000 பணம் அனுப்பியுள்ளார். பெண் வராததால், ஃபேஸ்புக் ஆசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை வாங்கி, அதில் சர்க்கரை கலந்து கையில் தேய்த்துக்கொள், பெண் வருவார் என கூறியுள்ளனர். இதனை அந்த இளைஞர் செய்ய, கையில் புண் தான் வந்துள்ளது. பின்னரே, இது ஃபேக் ஐடி என தெரிய வந்துள்ளது.
News December 29, 2025
கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க அனுமதி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அதன்படி வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின்னர் அகழாய்வு பணிகள் தொடங்கும். இதுவரை சுமார் 20,000 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்கள் வெளிவரும்.
News December 29, 2025
மீண்டும் இணைந்தனர்.. அரசியலில் முக்கிய திருப்பம்

மகாராஷ்டிரா மாநில மாநகராட்சித் தேர்தலில் சரத் பவார் – அஜித் பவார் அணிகள் இணைந்து போட்டியிடவுள்ளன. பிம்பரி – சிஞ்ச்வாட் நகராட்சி தேர்தலில் சரத் பவாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். மீண்டும் பவார்கள் கைகோர்த்துள்ளது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. <<18692105>>மும்பையில்<<>> தனித்தே போட்டியிடவுள்ளதாக அஜித் பவார் தரப்பு அறிவித்திருந்தது.


