News December 25, 2025
ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000.. அரசு முக்கிய முடிவு

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS, நயினார் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் CM ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு அறிவிப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 27, 2025
மாத சம்பளம் வாங்குவோருக்கு HAPPY NEWS

2026 ஏப்ரல் 1-ம் தேதி புதிய வருமானவரி சட்டம் அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு முன்பே அறிவித்திருந்தது. இந்த சட்டத்தின்படி ₹12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி இல்லை. அதாவது மாதம் ₹1 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்டத் தேவையில்லை. வருமான வரி இல்லை என்பதால், மக்கள் பணத்தை தாராளமாக செலவு செய்யும் போது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு கருதுகிறது.
News December 27, 2025
தவறான தகவல் அளித்தால் 1 ஆண்டு சிறை: ECI

வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என ECI தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் 2002/2005 SIR பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.
News December 27, 2025
2025-ல் ₹500 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள்!

இந்த ஆண்டு சில பெரிய படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஃப்ளாப் ஆனாலும், பல திரைப்படங்கள் செம ஹிட் அடித்துள்ளன. இந்த ஆண்டில் மொத்தம் 5 படங்கள் ₹500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. இந்த பட்டியலில் ஒரே ஒரு தமிழ் படம் தான் இடம்பெற்றுள்ளது. அது எந்த படம் என்பதையும், பட்டியலில் உள்ள படங்கள் எவை என்பதையும் மேலே SWIPE பண்ணி பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த படம் எது?


