News December 25, 2025

நாமக்கல் அதிரடி சரிவு; இன்றைய நிலவரம் இதுதான்!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை மேலும் ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.90 ஆனது. அதேபோல், கறிக்கோழி கிலோ ரூ.124-க்கு, முட்டை கொள்முதல் விலை ரூ.6.40 விற்பனையாகி வருகிறது.

Similar News

News January 14, 2026

நாமக்கல்-சேலம் சாலையில் பயங்கரம்!

image

நாமக்கல்-சேலம் சாலை, சாமிநகரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி குருநாதன் (70). இவர் தனது டூவீலரில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் குருநாதன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 82.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News January 14, 2026

நாமக்கல்: ரயில்வேயில் வேலை – APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!