News May 1, 2024

ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ

image

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ₹24 லட்சம் அபராதம் விதித்துள்ளது. LSG அணிக்கு எதிரான 48ஆவது லீக் போட்டியில், MI அணி ஸ்லோ ஓவர் ரேட் செய்தததை அடுத்து, அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. MI அணி இன்னும் ஒரு ஸ்லோ ஓவர் ரேட்டைப் பெற்றால் ஒரு போட்டியில் விளையாட கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 23, 2026

பூச்சி மருந்து குடித்து முதியவர் இறப்பு

image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள மனம்பூண்டி பகுதியில் உள்ள, தென்பெண்ணை ஆற்று பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று(மார்ச். 23)இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அரகண்டநல்லூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம், கோணலூர் பகுதியைச் சேர்ந்த ராமர் வயது 75 என்பது தெரிய வந்துள்ளது.

News March 23, 2026

234 தொகுதிகளிலும் விஜய்க்கு வேட்பாளர்கள் உள்ளனரா?

image

தமிழகத்தில் தனித்து போட்டி என அறிவித்துள்ள விஜய்க்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கின்றனரா என்பது சந்தேகமான ஒன்றுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக சார்பில் EPS தான் முதல்வராக ஆட்சியமைப்பார் என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் பற்றிய குஷ்புவின் பேச்சு பற்றி உங்கள் கருத்து என்ன?

News March 23, 2026

CINEMA 360: கருப்பு படத்தில் சிம்பு!

image

*‘கருப்பு’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் *கென் கருணாஸ் இயக்கும் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் *குட்டி டிராகன் கேரக்டரை போல, STR 51 படத்தில் சந்தானத்தின் கேரக்டர் இருக்கும் என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார் *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ₹15 கோடி செலவு செய்துள்ளார்களாம். இதில் மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, ஆயிஷா கான் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

error: Content is protected !!