News December 25, 2025
மதுரை: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

வாடிப்பட்டி அருகே எம்.புதுப்பட்டி சேர்ந்தவர் கண்ணன் மனைவி பஞ்சு (55). இவர் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் நெல் அறுவடை பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது நெற்கதிரில் பதுங்கி இருந்த பாம்பு ஒன்று இவரை கடித்தது. சோழவந்தான் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை மருத்துவமனை கொண்டு வரப்பட்ட இவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 15, 2026
மதுரை : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 15, 2026
மதுரை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY LINK!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கு <
News January 15, 2026
BREAKING: ஜல்லிகட்டில் ஒரே சுற்றில் 16 காளைகள் பிடித்த வீரர்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், மாடுபிடி வீரர் கார்த்திக் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஜல்லிக்கட்டிலும் முதற்பரிசு வென்ற இவர், இந்த ஆண்டு சீறிப்பாய்ந்த காளைகளை லாவகமாகப் பிடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


