News December 25, 2025

தூத்துக்குடி: மாடு குறுக்கே வந்ததால் பறிபோன உயிர்

image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலை மோடி நகர் பகுதியில் மாடு குறுக்கே வந்ததில் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பு செயலாளர் பென்சிகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

தூத்துக்குடி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

நெல்லை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0462-2573017, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க..

News December 26, 2025

தூத்துக்குடி: சாலை விபத்தில் ஒருவர் பலி

image

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் முத்து (29). இவர் நேற்று இரவு அம்பலசேரியில் இருந்து கட்டாயமங்கலம் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 26, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை அவசர நேரங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!