News December 25, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வரபாளையம், காட்டூர், எஸ்.என்.பாளையம், பொங்கலூர், ஜி.என்.பாளையம், குன்னத்தூர், வேலம்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட குன்னத்தூர், குறிச்சி, தாளப்பதி, காவுத்தம்பாளையம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஒரு வீட்டில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,300-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(50), சுரேந்தர்(21), வெங்கடாசலம்(44), ராமசாமி(52), செந்தில்(52) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
News January 16, 2026
திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.16) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


