News December 25, 2025

வேலூர்: வீடு புகுந்து நகை, கிறிஸ்துமஸ் துணிகள் திருட்டு!

image

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் டி.மோகன். பேரணாம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் பட்டுப்புடவைகள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாங்கிய புது துணிகள் ஆகியவை திருட்டு போயிருப்பதை கண்டு திடுக்கட்டார். இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 30, 2025

வேலூர்: மாயமான முதியவர் விபத்தில் பலி!

image

வேலூர், புதுப்பேட்டை பண்டராம் முத்தையன் தெருவைச் சேர்ந்தவர் பிச்சாண்டி (74) இவர் கடந்த 20 நாட்களுக்கு முன் மயமானதாக உறவினர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நெல்லூர்பேட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத முதியவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் வழக்கு பதிவு செய்த குடியாத்தம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர் பிச்சாண்டி என உறுதி செய்யப்பட்டது.

News December 30, 2025

வேலூர்: திருமணம் செய்வதாகக் கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை!

image

வேலூர், குடியாத்தம், அக்ரஹாரம் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்குமார் (23) இவர் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாயும் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளது.

News December 30, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.29) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!