News December 25, 2025
தேனி: ரூ.10 லட்சம் வரை மானியம்… ஆட்சியர் அறிவிப்பு!

விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டம் மூலம் சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக மாற்ற 50% (அ) ஒரு தறிக்கு ரூ.1 லட்சம் (அதிகபட்சம் 10 தறிகள்), புதிய ரேபியர் தறிகள் கொள்முதலுக்கு 20% (அ) ரூ.1.50 லட்சம் (5 தறிகள்), பொது வசதி மையம் அமைக்க 25% (அ) ரூ.60 லட்சம் வரை தமிழக அரசால் மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் <
Similar News
News January 11, 2026
தேனி: மது போதையால் நடந்த விபரீதம்..

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (52). இவருக்கும், இவரது மகனுக்கும் நேற்று முன் தினம் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கர்ணன் அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த செயல் குறித்து மனவேதனை அடைந்த கர்ணன் நேற்று (ஜன.10) அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News January 11, 2026
போடியில் பாலியல் தொழில்… அதிர்ச்சி

போடி பகுதியை சேர்ந்தவர் காஜாமைதீன். இவரது மனைவி ரதியா பானு. இவர்களது நண்பர் குருவுலட்சுமி. இவர்கள் மூவரும் சேர்ந்து போடி பகுதியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து போடி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பூபதி அளித்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் காஜாமைதீன், ரதியாபானு மற்றும் குருவுலட்சுமி மூவரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


