News December 25, 2025

தருமபுரி: தொப்பூர் அருகே தொடரும் விபத்து!

image

தருமபுரி, நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில், இன்று (டிச.25) விடியற்காலை காலை 2 மணி அளவில் கனரக வாகனா லாரி தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில், வாகன ஓட்டுநர் சிறிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு நேர்ந்தது. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

தருமபுரி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

தருமபுரியில் நாளை டிசம்பர் 30/25 அன்று தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக எம்.வெள்ளாளப்பட்டி, கூத்தம்பட்டி, பள்ளிப்பட்டி, சுண்டக்காப்பட்டி, வீரணகுப்பம், குட்டப்பட்டி, சிங்கிரிப்பட்டி, பச்சினாம்பட்டி, கதிரம்பட்டி, செட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவுரை.

News December 29, 2025

தருமபுரி: பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து துணிகரம்!

image

நல்லாம்பட்டியில், கூலித் தொழிலாளி முனிராஜ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து 19.5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முனிராஜின் மனைவி வெண்ணிலா மதியம் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News December 29, 2025

தருமபுரி: முகமூடி கொள்ளையர்கள் மூதாட்டியிடம் கைவரிசை

image

அரூர் -குரூம்பட்டி சாலையில், நேற்று அதிகாலை குரும்பட்டியில், வீட்டின் வெளியே தனியாக படுத்திருந்த வேலாயுதம்(85) என்பவரிடம் முகமூடி கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த மோதிரத்தை பறித்தனர். பின், வேலாயுதம் சத்தம் போடவே வீட்டிலிருந்து வெளியில் வந்த மனைவி மீனா (80) அணிந்திருந்த, 5 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!