News May 1, 2024
மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு ஜூன் 2 வரை கோடை விடுமுறை

மதுரை உயர் நீதிமன்ற கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று (மே 1) முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை ஆகும்.
விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
மதுரை: 38,247 போ் 10ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுகின்றனா்

மதுரை மாவட்டத்தை பொருத்தவரை மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் 214, அரசு உதவிபெறும் பள்ளிகள் 84, தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 181 என மொத்தம் 479 பள்ளிகள் உள்ளன.
இந்த நிலையில், இரு கல்வி மாவட்டங்களிலும் 18,980 மாணவா்கள், 19,267 மாணவிகள் என மொத்தம் 38,247 போ் 10ம் வகுப்புத் தோ்வை எழுதுகின்றனா். அனுமதி எண் ஒட்டுதல் பணியில் ஆசிரியா்கள் ஈடுபட்டனர்.
News March 11, 2026
மதுரை: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
News March 11, 2026
மதுரை: பெண்களை நிர்வாணமாக சித்தரித்தவர் கைது

மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் சரவணன்(39) பங்கு தாரர்களாக கப்பலூர் சிட்கோவில் கார்க் (தக்கை) செய்யும் கம்பெனி வைத்துள்ளனர். அங்கு பணியாற்றும் பெண்களை செல்போனில் படம் எடுத்து, அதை AI உதவியுடன் நிர்வாணமாக மாற்றி சரவணன் ரசித்து வந்துள்ளார். இதை பங்குதாரர் சுப்புராஜ் கண்டுபிடித்து திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சரவணனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.


