News May 1, 2024
தங்கம் விலை ₹920 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹920 சரிந்துள்ளது. நேற்று ₹54,000க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,080க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,750க்கு விற்ற ஒரு கிராம் தங்கம், இன்று ₹115 குறைந்து ₹6,635க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சுமார் ₹1000 குறைந்திருப்பது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ₹86.50க்கு விற்பனையாகிறது.
Similar News
News February 18, 2026
கோயில்களில் திருமணம்.. இந்த சான்று அவசியம்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த விரும்புவோர் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை கோயில் நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பது அவசியம். இந்த சான்றை பெறுவதற்கு இனிமேல் VAO, தாசில்தாரை அணுக வேண்டிய தேவையில்லை. நோட்டரி வழக்கறிஞரிடம் சான்று வாங்கி இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தாலே திருமணம் ஆகாதவர் சான்றை பெறும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
News February 18, 2026
போலி பென்ஷன் அட்டை.. நம்பாதீங்க

போலியான பென்ஷன் அட்டைகள் இணையத்தில் பரவுவதாகவும் அதை நம்ப வேண்டாம் என்றும் பரோடா வங்கி அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஓய்வூதிய அட்டைகள் தொடர்பாக போன் கால் மூலம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட விவரங்களை கேட்டால் பகிர வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப் / SMS மூலம் வரும் Link-களை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.
News February 18, 2026
MGR உத்தரவை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: சேரன்

சிறு படங்களை காப்பாற்ற, MGR-ன் உத்தரவை TN அரசு பின்பற்ற வேண்டும் என சேரன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பேசிய அவர், MGR CM-ஆக இருந்தபோது, டப்பிங் படங்களால் தமிழ் சினிமா அழியும் நிலை இருந்தது. உடனே MGR, எல்லா தியேட்டர்களும் ஆண்டுக்கு 90 நாள்கள் தமிழ் படங்களைத்தான் திரையிட வேண்டும்; இல்லை என்றால், லைசன்ஸ் ரத்து என்று அறிவித்தார். இதனை TN அரசு பின்பற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


