News December 25, 2025

கரூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது!

image

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் கைதான ரமணி (36) மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு ‘சரித்திர பதிவேடு’ குற்றவாளி ஆவார். சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News December 28, 2025

கரூர்: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

image

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>https://parivahansewas.com/ <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News December 28, 2025

கரூர் மாவட்டத்தில் 6 பேர் கைது!

image

கரூர், தென்னிலை, வெள்ளியணை, வாங்கல், வெங்கமேடு ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற முத்துசாமி (41), ஆறுமுகம் (56), ராஜா (37), சண்முகம் (60), சேகர் (53), ஆசைதங்காள் (63) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News December 28, 2025

கரூர்: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

image

கரூர் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/-மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க <>க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!