News December 25, 2025
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கனுமா..?

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு வரும், டிச.27 மற்றும் டிச.28, ஜன.03, ஜன.04 ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. பொது மக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து இம்முகாம்களில் வழங்கிடுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News January 2, 2026
திருவள்ளூரில் உடல் நசுங்கி கொடூர பலி!

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இதயதுல்லா(30). இவர், தடாவில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(ஜன்.1) தனது பைக்கில் கடைக்கு சென்றுகொண்டிருந்த அவர் மீது லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது லாரி ஏறி, இறங்கியதால் உடல் நசுங்கி கொடூரமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 2, 2026
திருவள்ளூர்: ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News January 2, 2026
திருவள்ளூர்: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)


