News December 25, 2025
ரெயில் மீது கல்வீசிய சிறுவன் கைது

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
Similar News
News January 2, 2026
குமரியில்153 கிலோ கஞ்சா கடந்த ஆண்டு பறிமுதல்

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 153 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையின் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டு 255.98 சதவீதம் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை நேற்று (ஜன.1) தெரிவித்துள்ளது.
News January 2, 2026
குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News January 2, 2026
குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

தத்தன்விளையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஜெகன் (46). இவர் நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவி அகிலா-விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிள்ளைகளிடம் சிறிது நேரம் விளையாடியவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


