News December 25, 2025

தமிழகத்திற்கு ஜனவரியில் புதிய டிஜிபியா?

image

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆக.31-ல் ஓய்வு பெற்றார். புதிய டிஜிபி நியமிக்கப்படாததால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வந்த நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜனவரியில் தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதில், மூத்த IPS அதிகாரி சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News December 31, 2025

BSNL அறிவித்த பம்பர் ஆஃபர்!

image

பல டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வரும் நிலையில், BSNL மக்களுக்கு ஹேப்பி நியூஸை கொடுத்துள்ளது. ₹347, ₹485, ₹2399 ரீசார்ஜ் திட்டங்களுக்கு வழங்கி வந்த தினசரி 2 GB டேட்டா, தற்போது தினசரி 2.5 GB டேட்டாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல, ₹225-க்கு வழங்கி வந்த தினசரி 2.5 GB டேட்டாவை, தினசரி 3 GB டேட்டாவாக உயர்த்தி BSNL அறிவித்துள்ளது.

News December 31, 2025

விஜய் உடன் மோதும் அஜித்

image

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை மிகப்பெரிய வெற்றியடைய செய்ய வேண்டும் என நினைத்த அவரது ரசிகர்களுக்கு, பேரிடியாக ஒரு தகவல் வந்துள்ளது. அஜித்தின் மங்காத்தாவை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் SM-ல் வீடியோ பகிர்ந்துள்ளது. ஜன.10-ல் மங்காத்தா ரீ-ரிலீசானால் மீண்டும் தல, தளபதி கிளாஷ் உருவாகும். பராசக்தியும் ரிலீஸ் ஆவதால் ஜனநாயகனின் வசூல் பாதிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News December 31, 2025

பொங்கல் பரிசு.. வெளியான முதல் இனிப்பான செய்தி

image

பொங்கல் பரிசு எப்போது கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கிவிட்டது. CM ஸ்டாலினின் போட்டோ உடன் அச்சடிக்கப்பட்ட அந்த டோக்கனில் குடும்ப அட்டைதாரரின் பெயர், கு.அட்டை எண், கிராமம்/ தெரு உள்ளிட்டவை அடங்கியுள்ளன அடங்கியுள்ளன. மேலும் பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் ஆகியவையும் குறிப்பிடும்வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!