News December 25, 2025
கன்னியாகுமரியில் மட்டும் 23,043 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 8, 2026
குமரியில் ரூ.1.60 கோடி அபராதம்..!

குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குட்கா, பான் மசாலா விற்பனை போன்றவைகளுக்காக ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 950 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (ஜன.7) தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனை நடைபெறும் எனவும் கூறினர்.
News January 7, 2026
குமரி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி?

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு அத்தனை கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் , இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அத்தனை தலைவர்களையும் மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 7, 2026
குமரி: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

கன்னியாகுமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


