News December 25, 2025

அரியலூர்: தங்க விலை உயர்வு-பெண்கள் நூதன போராட்டம்

image

தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் ஒன்றுகூடி தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும், தங்கம் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நூதன போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கையில் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கட்டப்பட்ட கயிற்றை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Similar News

News January 7, 2026

அரியலூர்: திருமண தடையை நீக்கும் முக்கிய ஸ்தலம்!

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அமைந்துள்ள, பயறணீஸ்வர ஆலயம் திருமணத்தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 7, 2026

அரியலூர் தேமுதிக மாவட்ட செயலாளர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் பாசாரில் ஜன.9 அன்று நடைபெற இருக்கின்ற மக்கள் உரிமை மீட்பு மாநாட்டின் திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் மாநாட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று(ஜன.7) தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் ஜெயவேல் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித், மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநாட்டின் பணிகளை குறித்து கேட்டறிந்தனர்.

News January 7, 2026

அரியலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

அரியலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!