News December 25, 2025
ராணிப்பேட்டை: உடல் நசுங்கி செவிலியர் பலி!

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கலைச்செல்வி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று சக ஊழியரின் இருசக்கர வாகனத்தை பெற்று காரைக்கூட்டு சாலையில் இருந்து வாலாஜாபேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த அவர், பின்னால் வந்த அரசு பேருந்து ஏற்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சமத்துவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், அப்பகுதி போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
ராணிப்பேட்டையில் TNPSC குரூப் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு நாளை (டிச.27) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ள இத்தேர்வை எழுத விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை 9952493516 தொடர்பு கொள்ளவும்.
News December 26, 2025
ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலையில் மர்ம சாவு!

மேல்விஷாரம் டிஎம்ஷாப் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று(டிச.26) திடீரென தொழிற்சாலைக்குள் உயிர் இழந்தார் .அவரது உறவினர்கள் தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் உடலை வாங்கவும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ரத்தினகிரி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
ராணிப்பேட்டை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


