News December 25, 2025
குமரியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலம்!

குழித்துறை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 45 வயது நபர் ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவர் கையில் தேர்தலுக்கு வாக்களித்த மை காணப்பட்டதால் கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவராக இருக்கலாம் என போலீசார் கூறினர்.
Similar News
News December 25, 2025
குமரி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்கள், பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில்(04652 – 227339) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News December 25, 2025
குமரி: சொந்த வீடு கட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி

பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு அரசாங்கம் ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதில் முழுத் தொகையும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நிரந்தர வீடு இல்லாதவர்கள், வீடற்றவராகவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள் Aawas Survey App ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT
News December 25, 2025
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000…!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT


