News December 25, 2025
பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜீக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியது.
Similar News
News January 10, 2026
பெரம்பலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.SHARE பண்ணுங்க
News January 10, 2026
குடியரசு தின கொண்டாட்டத்திற்கு தயாராகும் பெரம்பலூர்

மக்களாட்சியின் மாண்பை சிறப்பிக்கும் வகையில், குடியரசு தினத்தையும் கொண்டாடி வருகிறோம். இந்த வகையில் ஜன.26 அன்று, குடியரசு தினத்தை நாடெங்கும் கோலாகலமான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அவற்றின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட சார்பில், இந்திய திருநாட்டில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டதற்கான பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜன.9-ஆம் தேதி நடைபெற்றது.
News January 10, 2026
பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

பெரம்பலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


