News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 15, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
சென்னை: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்

சென்னை மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*கபாலீஸ்வரர் கோயில் (மயிலாப்பூர்)
*பார்த்தசாரதி கோயில் (திருவல்லிக்கேணி)
*வடபழனி ஆண்டவர் கோயில்
*காலிகாம்பாள் கோயில் (சென்னைப் பஜார்)
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
சென்னையில் திருக்குறள் போட்டி அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டிகள் மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 19.01.2026 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும். மேலும் இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


