News May 1, 2024
கச்சா எண்ணெய்க்கான Windfall வரி குறைப்பு

கச்சா எண்ணெய் மீதான Windfall வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. எதிர்பாராத அதிகப்படியான லாபம் மீது விதிக்கப்படும் இந்த வரி, கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ₹9,600இல் இருந்து ₹8,400ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், வணிக கேஸ் சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன. முன்னதாக, கடந்த மாதம் ₹6,800ஆக இருந்த Windfall வரி ₹9,600ஆக உயர்த்தப்பட்டது.
Similar News
News March 22, 2026
ஜார்ஜ் கோட்டையில் விஜய் : செங்கோட்டையன்

தேர்தலில் வெற்றி பெற்று விஜய் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவார் என்று செங்கோட்டையன் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு புதிய புத்துணர்ச்சியோடு தூய ஆட்சியை உருவாக்க விஜய் புறப்பட்டுள்ளார்; இன்று தமிழகம் முழுவதும் மக்கள் மனதில் அவர் நிறைந்துள்ள காட்சிகளை பார்க்க முடிகிறது என்று கூறினார்.
News March 22, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 22, பங்குனி 8 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம்.
News March 22, 2026
UAE மீது சரமாரியாக தாக்கிய ஈரான் டிரோன்கள்

ஈரான் தற்போது அண்டை நாடுகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகம் பெற்ற $5.2 டிரில்லியன் வெளிநாடு முதலீடுகளில் 27% UAE -ல் இருந்து வந்தது. இதனால் அந்நாட்டை தாக்குவதன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை மறைமுகமாகச் சேதப்படுத்த ஈரான் தாக்குதல் நடத்துகிறது. உலகளாவிய முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ள துபாயின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே ஈரானின் உத்தியாகும்.


