News December 25, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.24) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 28, 2025
திருவாரூர்: அரசு அலுவலர்கள் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த், திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
News December 28, 2025
திருவாரூர்: அரசு பள்ளி மாணவியருக்கு ஊக்கத்தொகை

திருவாரூர் மாவட்டம், கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பு முதல், 5 வரை மாணவியருக்கு ரூ.500, 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ1000, இதற்கு பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 28, 2025
திருவாரூர் அருகே துடிதுடித்து பலி!

மன்னார்குடியை சேர்ந்தவர் அனிதா (37), இவர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ள தனது தங்கையை பார்ப்பதற்காக தனது உறவினருடன் பைக்கில் மன்னார்குடிக்கு சென்றுள்ளார். அப்போது தென்பாதி அருகே எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


